நடப்பாண்டில் பத்தாம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள்  தேர்வு எழுதினர்,இதில் மாணவர்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்தி 499 பேர், மாணவிகள் மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 ஆகும், மூன்றாம் பாலினத்தவர் 1 நபர் ஆவார்.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிகளின் தேர்ச்சி பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், 90.07 சதவீதம் மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர், மாணவர்கள் மூன்று லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் பத்தாம் வகுப்பில் 97.22 சதவீதம் மாணவர்கள் தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம்  பிடித்து உள்ளது,இதில் தமிழ் பாடத்தில் ஒரே யாருர மாணவன் மட்டும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மொழிப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் என்னும் சாதனை எல்லாருக்கும் சாத்தியம் ஆவதில்லை.

இந்த நிலையில் 10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற திருச்செந்தூரை சேர்ந்த மாணவி துர்கா சாதனை படைத்துள்ளார்..

துர்கா

திருச்செந்தூர் அருகில் உள்ள காஞ்சி சங்கர மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி இவர்,இவர் தந்தை பெயர் செல்வகுமார்,இவர்ஆறுமுகநேரி பகுதியைச் சார்ந்த காவலராகப் பணிபுரிந்து வருகிறார்,இந்த நிலையில் தமிழ் பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவி துர்காவுக்கு  பாராட்டு மழை குவிந்து வருகிறது…