அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம்.

அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். அண்ணன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது.

இங்கேயும் அப்படித்தான். தன் தங்கைக்கு பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடிப்பிடித்து திருமணம் செய்து வைத்தார் ஒரு அண்ணன். தங்கையோ, தன் அண்ணனின் மீது அளவில்லாத பாசம் வைத்திருந்தார். அவரை பிரிந்து மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதை நினைத்து அந்த மணப்பெண் கதறி அழுகிறார்.

அதிலும் திருமண மேடையின் பக்கத்தில் நின்றே அந்த இளம்பெண் தன் அண்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு கதறி அழுகிறார். அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல இதற்கு மேல் வார்த்தை இல்லை எனச் சொல்லும் அளவுக்கு இந்தக் காட்சிகள் உள்ளது. குறித்த இந்த மலையாள கல்யாணப் பொண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.