ஊத்தங்கரை அருகே பெண் வயிற்றில் க.ட்டி இருந்த நிலையில், அவர் க.ர்.ப்.ப.மா.க இருப்பதாகக் கூறி 7 மாதம் சிகிச்சை அளித்ததாக, அரசு மருத்துவர்கள் மீது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி அஸ்வினி (22).

இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அஸ்வினி ஓராண்டுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் கல்லாவியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.

சோதனையில் அஸ்வினி க.ர்.ப்.ப.மா.க இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஏழு மாதமாக கர்.ப்.பி.ணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளான தடுப்பூசி போடுதல், மாதாந்திரப் பரிசோதனை செய்தல், சத்து மாத்திரைகள் உட்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்துள்ளன.

 

அஸ்வினி பெயரில் தனியாக தாய் மற்றும் சேய் நலக் காப்பகம் மூலம் அட்டை கொடுத்து அதில் வார வாரம் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி மாதாந்திரப் பரிசோதனைக்குச் சென்றபோது அஸ்வினி வயிற்று வ.லி இருப்பதாக மருத்துவரிடம் கூறியுள்ளார்.

ஆகையால் மருத்துவர் ஸ்கேன் செய்து வருமாறு கூறியுள்ளார், அதனைத் தொடர்ந்து தருமபுரியில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்திற்குச் சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் கு-ழ-ந்-தை ஏதும் இல்லை எனவும் நீர்க்கட்டி இருப்பதும் தெரியவந்தது.

மேலும், அதன் பிறகு உடனே இன்னொரு ஸ்கேன் செய்யும் மையத்திற்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தனர். அவர்களும் கு-ழ-ந்-தை இல்லை நீர்க்கட்டி தான் என்று உறுதியாக கூறியுள்ளனர்.

அதன் பிறகு உடனே அஸ்வினியும் அவரின் உறவினர்களும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று மருத்துவர்களிடம் கேட்டனர்.

அதற்கு அந்த மருத்துவர் கூறியது என்னவென்றால் ‘சாரி தெரியாம நடந்திருச்சு’ என ஜாலியாக கூறியுள்ளார்.

க.ர்.ப்.ப.த்.திற்கும் நீர்கட்டிற்கும் வித்தியாசம் கூட தெரியாமல் சி கிச்சை அளித்த மருத்துவர்கள் மீ து ந டவடிக்கை எடுக்க வேண்டுமென அஸ்வினியும் அவர் குடும்பத்தாரும் கோரிக்கை வைத்துள்ளனர்.