நீங்கள் கடைகளில் வாங்கும் பொருட்கள் காலாவதி ஆகி இருந்தால் முதலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சாமானிய மக்களாகிய நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

2006ஆம் ஆண்டு அன்றைய அரசால் கொண்டுவரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரம்(Food Saftey Standards Act 2006) என்கின்ற ஒரு சட்டத்தை அன்றைய மத்திய அரசாங்கம் கொண்டு வந்தது.

இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு பொருள் பேக்கிங் செய்யப்படும் பொழுது அந்த பொருட்களின் கவரில் பொருட்கள் தயாரிக்கப்பட்ட தேதி, உணவுப் பொருட்களில் என்னென்ன பொருட்கள் கலந்து இருக்கிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதனை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

அதனை மக்கள் அனைவரும் பார்த்து வாங்க வேண்டும். அதில் முக்கியமாக தண்ணீர் பாக்கெட், தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்களை வாங்கும்பொழுது அதன்மேல் ISI முத்திரை இருக்கின்றதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

ஒரு வேளை அப்படி எதுவும் இல்லாமல் காலவதியான பொருட்களை கடைகளில் விற்பனை செய்தாலோ அல்லது உணவுப் பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்ட கடைக்காரருக்கு அல்லது அதனை உற்பத்தி செய்பவர்களுக்கு பொருட்களின் தன்மையை பொருத்து அபராதம் விதிக்கப்படும்.

அப்படி இல்லையென்றால் கடைக்கு சீல் வைக்கப்படும்.

இது அனைத்தும் நுகர்வோர் பிரச்சனைகளின் கீழ் வருவதால் IPC Section 272 Adulteration of food or drink intended for sale மற்றும் IPC Section 273 – Sale of Noxious food or drink ஆகிய த.ண்.டனை சட்டத்தின் கீழ் த.ண்
டனை வழங்கப்படும்.

சட்டப்படி அணுகுவது எப்படி.?

நீங்கள் வாங்கும் பொருட்கள் காலாவதியான பொருட்களாக இருந்தால் நீங்கள் உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்

அல்லது அந்த குறிப்பிட்ட கவரை புகைப்படமாக எடுத்து வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம் அதுமட்டுமில்லாமல் நீங்கள் [email protected] என்கின்ற மின்னஞ்சல் மூலமாகவும் உங்களுடைய புகார் தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் TNLMCTS என்னும் மொபைல் செயலி மூலமாக நீங்கள் அந்த சம்பந்தப்பட்ட பொருட்களின் புகைப்படம் கடையின் புகைப்படம் உங்களுடைய குரல் பதிவு வீடியோ பதிவு போன்றவற்றை நீங்கள் உங்களுடைய மொபைல் செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் மக்களுக்கு இது போன்ற நிறைய பிரச்சனைகளுக்கு சட்டப்படி உடனே தீர்வு கிடை நம்முடைய சட்டத்தில் இடம் உண்டு.

ஆனால் அது போன்ற பிரச்சினைகளுக்கு என்ன எல்லாம் வழி இருக்கிறது என்பது சாதாரண மக்களுக்கு சென்று சேர்வதில்லை அரசும் அதை உரிய முறையில் தெரியப்படுத்துவது இல்லை.