நடிகை வனிதா நான்காவதாக ஒருவரை திருமணம் செய்துள்ளார் என்று தீயாய் பரவி செய்திக்கு வனிதா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடித்து வரும் வனிதா, ஆரம்பத்திலிருந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்று மக்களின் வெறுப்பினை சம்பாதித்து, பின்பு நல்ல அம்மா என்று பெயர் வாங்கினார்.

ஆனால் அது சிறிது நாட்கள் கூட நீடிக்கவில்லை. ஆம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து பெரும் சர்ச்சையினை சந்தித்ததோடு, அவரையும் சில மாதங்களில் பிரிந்தார்.

வாழ்வில் எத்தனை சர்ச்சைகளை சந்தித்தாலும் விரைவில் மறந்துவிட்டு, பீனிக்ஸ் பறவையாக வலம் வருகின்றார்.

இந்நிலையில் வனிதா வட இந்தியாவைச் சேர்ந்த விமான பைலட் ஒருவருடன் நட்பு ஏற்பட்டதாகவும், இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் நடைபெற்றதாகவும், அவரது கழுத்தில் கருப்புநிற மணி போன்ற செயின் இருக்கும்… அது கணவர் வழக்கத்தின் படி கட்டிய தாலி என்றும் பரபரப்பாக தகவல்கள் வெளியானது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வனிதா கொடுக்கப்போகும் விளக்கம் தான் எதிர்பார்த்த நிலையில், வனிதா இதுகுறித்து டுவிட் செய்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நான் தற்போது சிங்கிளாகவே தான் இருக்கிறேன்… எந்தவொரு வதந்தியையும் நம்ப வேண்டாம்… இதனை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.