பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் மிகவும் ஹாட்டான மேலாடையை போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

நடிகை சாக்ஷி அகர்வாலையும் கவர்ச்சியையும் பிரிக்க முடியாது என சொல்லும் அளவுக்கு அவரது புகைப்படங்கள் சமீப காலமாக இருந்து வருகிறது. மிக அதிகமாக கவர்ச்சி காட்டி தான் அவர் தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

காலா, விஸ்வாசம், டெடி உள்ளிட்ட படங்களில் சிறிய ரோல்களில் நடித்து இருக்கும் சாக்ஷி அகர்வால், அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டதால் தான் அதிகம் பாப்புலர் ஆனார். அந்த ஷோவில் அவர் ஏற்படுத்திய சர்ச்சைகளையும் யாரும் மறுப்பதற்கு இல்லை.

பிக் பாஸுக்கு பிறகு அதிக படங்களில் கமிட் ஆன அவர் தற்போது அதில் பிசியாக நடித்து வருகிறார். அரண்மனை 3, பஹீரா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட பல படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன.

கொரோனா லாக்டவுனில் கூட அவர் வீட்டில் ஒர்கவுட் செய்யும் கவர்ச்சி வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று மிகவும் கவர்ச்சியான மேலாடையை அணிந்துகொண்டு சாக்ஷி போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு சாரார் சூப்பர் என புகழ்ந்தாலும், மறுபுறம் விமர்சனங்களும் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.

இவ்வளவு கவர்ச்சி வேண்டாம், இப்படி மோசமாக உடை போடாதீங்க, யாரவது இவருக்கு ஒரு ஹீரோயின் வாய்ப்பை கொடுங்கப்பா.. இப்படி பல்வேறு கமெண்டுகள் வந்துகொண்டிருக்கிறது.

யாரு அந்த உடையின் காஸ்டியூம் டிசைனர் என ஒரு ரசிகர் கேட்டிருக்கிறார். இந்த போட்டோவை உடனே டெலிட் செய்ய சொல்லி கேட்டிருக்கிறார் மற்றொருவர். இப்படி மிகவும் மோசமான கமெண்டுக்ள் தான் சாக்‌ஷிக்கு கிடைத்து வருகிறது.