தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 24ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, இம்மாதம் 7ம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கு வரும் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

வணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதர …🙏🏻🙏🏻